Home India Elections 2014 இந்திய நாடாளுமன்ற தேர்தல் : மோடி, சோனியா, அத்வானி தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் : மோடி, சோனியா, அத்வானி தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!

624
0
SHARE
Ad

advani-soniaடெல்லி, ஏப்ரல் 30 – இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 9-கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், முரளிமனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் உட்பட 89  தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

7-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று, மொத்தம் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் இத்தேர்தல் நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

குஜராத்தில் 26 தொகுதிகளிலும், ஆந்திராவில் 17, உத்தரப்பிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பீகாரில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, நரேந்திர மோடி போட்டியிடும் குஜராத்தின் வதோதரா, அத்வானி போட்டியிடும் காந்திநகர், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடும் ஸ்ரீநகர் ஆகியவை இன்று தேர்தல் நடைபெறும் முக்கிய தொகுதிகளாகும்.