சென்னை, ஏப்ரல் 30 – சென்னைக்கு அருகில் செயல்பட்டு வரும் உலகப் புகழ் பெற்ற கைத்தொலைபேசி உற்பத்தி மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனமான பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனத்திற்கு, தமிழ் நாடு அரசாங்கம் 2,400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னைக்கு அருகிலுள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கைத்தொலைபேசிகளை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, உள்நாட்டு சந்தைகளிலேயே விற்று வருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அபராதம் குறித்த தமிழக அரசின் முடிவுக்கு எதிராக நோக்கியா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
தமிழக அரசின் முடிவு அடிப்படையற்றது என நோக்கியா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.