Home இந்தியா அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தென் சென்னை, வாரணாசி தொகுதிகள்

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தென் சென்னை, வாரணாசி தொகுதிகள்

763
0
SHARE
Ad

modiபுதுடில்லி, மே 20 – நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள் என்ற பெருமையை தென் சென்னையும், வாரணாசியும் பெற்றுள்ளன.

கடந்த ஏப்ரல் 24–ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தென் சென்னை நாடாளுமன்ற  தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சா வடியிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதேபோல் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி உள்பட 42 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 வாக்குப்பதிவுஇயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

தென் சென்னையில் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் அதிமுக சார்பில் வென்றார்.

வாரணாசியில், நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதற்கு முன்பு 2004–ல் நடந்த நாடாளுமன்றதேர்தலில் அதிகபட்சமாக இந்த தொகுதியில் 35 வேட்பாளர்கள் மோதினார்கள்.

எனவே தொடர்ச்சியாக 3 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற பெருமை தென் சென்னைக்கு கிடைத்து உள்ளது.