Home இந்தியா பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜிதன் ராம் மன்ஜி நியமிக்கப்பட்டார்.

பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜிதன் ராம் மன்ஜி நியமிக்கப்பட்டார்.

639
0
SHARE
Ad

jitan_ram_manjhiபாட்னா, மே 19 – நடப்பு முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் தொடர்ந்து வரும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பீகார் மாநில பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அமைச்சரான ஜிதன் ராம் மஞ்சி பீகாரின் அடுத்த முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இன்று நிதிஷ்குமாரும் ஒன்றுபட்ட ஜனதா டால் கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் பாசிஸ்த் நாராயண் சிங்கும் மாநில ஆளுநரைச் சந்தித்து புதிய முதல்வரின் பெயரைச் சமர்ப்பிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய முதல்வரான மஞ்சி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்தின் காயா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ்குமார் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் தான் சார்ந்துள்ள ஜனதா டால் கட்சியின் பொறுப்பாளராகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு வேண்டிய ஒருவரை முதல்வராக நியமித்து விட்டு பின்னணியில் இருந்து பீகார் மாநிலத்தை மறைமுகமாக ஆள நிதிஷ்குமார் முற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.