Home இந்தியா பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் புதிய கூட்டணியோடு மீண்டும் முதலமைச்சர்

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் புதிய கூட்டணியோடு மீண்டும் முதலமைச்சர்

1030
0
SHARE
Ad

பாட்னா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலானக் கூட்டணியை வெற்றிகரமாகக் கவிழ்த்த பாஜக, அதே போன்ற பிரச்சனையை பீகார் மாநிலத்தில் சந்தித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட ஜேடியு என்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமையும் கோரினார். இந்த முறை நிதிஷ் குமார் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் புதிய கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்கிறார்கள்.

இந்த கூட்டணியில் காங்கிரசும் பங்கு வகிக்கிறது.

2015-இல் நிதிஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 2017-ல் மீண்டும் பாஜகவிடமே திரும்பினார். தேஜஸ்வி யாதவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ஜேடி கூட்டணியை முறித்தார்.

இதைத் தொடர்ந்து பீகார் அரசியல் மாற்றம் இந்திய அரசியல் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.