Home நாடு நஜிப், நீதிபதி நஸ்லானுக்கு எதிரான கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டார்

நஜிப், நீதிபதி நஸ்லானுக்கு எதிரான கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டார்

408
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவன வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கும் நஜிப் துன் ரசாக், அந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி முகமட் நஸ்லானுக்கு எதிராகத் தான் சுமத்திய கையூட்டு குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிரான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் நீதிபதி நஸ்லான் தன்னை விடுவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற வாதத்தில் நஜிப் உறுதியாக இருக்கிறார்.

ஏற்கனவே, 1எம்டிபி விவகாரத்தில் வங்கி சட்டத் துறை அதிகாரியாகப் பணியாற்றியிருந்ததால் நஸ்லான் தனது வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை நஜிப் முன்வைத்திருக்கிறார். அதன் காரணமாக, இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து இன்னொரு நீதிபதியின் முன்னிலையில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என நஜிப் மேல்முறையீடு செய்திருக்கிறார்.