Home One Line P2 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி

681
0
SHARE
Ad

புது டில்லி: நேற்று நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் (பாஜக -74, ஜேடியு. -43, விஐபி. – 4, ஹெச்ஏஎம். – 4) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகா கூட்டணி 110 தொகுதிகளில் (ஆர்ஜேடி. – 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் – 16) வெற்றி பெற்றுள்ளது. ஏஐஎம்ஐஎம். 5, லோக் ஜனசக்தி 1, பிஎஸ்பி. 1, சுயேச்சை 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. பீகாரில் இம்முறை 35 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதனால், வாக்கு எண்ணிக்கை முடிவும் தாமதமாக வெளியாக நேரிட்டது.

#TamilSchoolmychoice

பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.