Home One Line P2 பீகார்: நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை!

பீகார்: நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை!

679
0
SHARE
Ad

பீகார்: பீகார் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக, நிதிஷ் குமார் கூட்டணி 131 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாஜக 71 , நிதிஷ்குமாரின் கட்சி 49 என முடிவுகள் வெளிவந்துள்ளன.

இது பீகார் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாஜக, நிதிஷ்குமாருக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவும் அதே கணிப்பை உறுதிப்படுத்தியது. அதன் பிறகு பாஜக கூட்டணி சிறிய இடைவெளியில் பின் தொடர்ந்து வந்தது.

#TamilSchoolmychoice

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் 38 தொகுதிகள் பின்தங்கிய வகுப்பினருக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதிலும் 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் தோற்றுவித்து தலைமை தாங்கி நடத்திய ஆர்ஜேடி என்னும் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

லல்லு பிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவரது கடைசி மகனான தேஜஸ்வி யாதவ் கட்சியின் முகமாகவும் பீகாரின் அடுத்த முதலமைச்சராகவும் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று வருகிறார்.