Home One Line P1 ஆரம்ப, இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே கல்வியிலிருந்து விடுப்பட்ட விகிதம் அதிகரித்துள்ளது

ஆரம்ப, இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே கல்வியிலிருந்து விடுப்பட்ட விகிதம் அதிகரித்துள்ளது

543
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதித்ததில் இருந்து இந்த ஆண்டு நாட்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களிடையே கல்வியிலிருந்து விடுப்பட்ட விகிதம் அதிகரித்துள்ளது என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

ஆரம்ப பள்ளி மட்டத்தில் பள்ளியை விட்டு வெளியேறும் விகிதம் கடந்த ஆண்டு 0.12 விழுக்காட்டிலிருந்து இந்த ஆண்டு 0.13 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கொவிட் -19 பாதித்ததால் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் படிப்பு விகிதம் கடந்த ஆண்டு 1.14 விழுக்காட்டிலிருந்து 1.26 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

“மாணவர்கள் கல்வியை கைவிடுவதற்கான அபாயத்தைத் தடுப்பதில் கல்வி அமைச்சு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தும். இது நாட்டின் அடுத்த தலைமுறையின் குழந்தைகள் தொடர்ந்து பள்ளியில் கற்க முடியும் என்பதை உறுதி செய்வதாகும்,” என்று அவர் கூறினார்.

ஜூலை 31- ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட கல்வி அமைச்சின் தரவுகளின்படி, தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 2,741,837 மாணவர்களும், இடைநிலைப் பள்ளி அளவில் 2,037,433 மாணவர்களும் இணைந்துள்ளனர்.

மார்ச் முதல் அமல்படுத்தப்பட்ட கொவிட் -19 பாதிப்பு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் பல்வேறு கட்டங்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல், வீட்டிலிருந்து இயங்கலை கற்றலுக்கு மாற வழிவகுத்தது.