ஹிமாச்சலப்பிரதேஸ், ஏப்ரல்30 – நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து விட்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய் அரசு ஏசி அறைகளிலிருந்து திட்டங்களை தீட்டி வருவதாக பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட மோடி, கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு துரோகம் இழைத்து வருவதாக குறிப்பிட்டார்.
2009-ஆம் ஆண்டு தேர்தலில் விலைவாசி உயர்வை 100 நாட்களுக்குள் கட்டுப்படுத்துவதாக கூறிய காங்கிரஸ் கட்சி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதா என்றும் நரேந்திரமோடி கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் தவறுகளை மக்கள் மன்னிப்பார்களே தவிர, துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார். கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களில் பெரும்பாலானோர், ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்ட மோடி, அவர்களது தியாகங்களையும் நினைவுகூர்ந்தார்.
ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய விவகாரத்தில், அவர்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக மோடி குற்றம்சாட்டினார்.