Home கலை உலகம் காதல் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை – ஹன்சிகா மோத்வானி

காதல் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை – ஹன்சிகா மோத்வானி

628
0
SHARE
Ad

hanசென்னை, ஏப்ரல் 30 – காதல் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் நடிகர் சிம்புவுடனான காதல் முடிவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து ,தற்பொழுது ஒன்பது படங்களுக்கு மேல் தனது கைவசம் வைத்திருக்கும் ஹன்சிகாவிடம், நடிகர் சித்தார்த் உடன் காதல் இருப்பதாக பரவலாக பேசப்படுவது குறித்து கேட்கப்பட்டது.

இது குறித்து பதிலளித்த ஹன்சிகா, இந்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.  சித்தார்த் என்னுடன் நடித்த நடிகர்.  அந்த படத்தின் படபிடிப்பு நடந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன.

#TamilSchoolmychoice

அவருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை.  அடுத்த இரு வருடங்கள் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திட நான் திட்டமிட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடிகர் சிம்புவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ஹன்சிகா மேலும் கூறுகையில், தற்பொழுது ஒரே நேரத்தில் 9 படங்களில் நடித்து வருகிறேன்.

உண்மையில் காதல் செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை.  நான் ஓய்வின்றி எனது பணியில் ஈடுபட்டு வருகிறேன்.  தற்பொழுது எனது காதல் நடிப்புடன் மட்டுமே உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.