Home வணிகம்/தொழில் நுட்பம் பில் கேட்ஸை விட அதிகமான பங்குகளை மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஸ்டீவ் பால்மர்

பில் கேட்ஸை விட அதிகமான பங்குகளை மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஸ்டீவ் பால்மர்

531
0
SHARE
Ad

Steve-Ballmer-Featureநியூயார்க், மே 5- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் உலகப் பணக்காரர் பில்கேட்ஸை விட அதிகமான பங்குகளை அந்த நிறுவனத்தின்முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ்  பால்மர் (படம்) தற்போது வைத்திருக்கின்றார்.

சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அமெரிக்க பங்குச் சந்தையின் அதிகாரப்பூர்வ தகவலின்படிபில்கேட்ஸ் 4.6 மில்லியன் மைக்ரோசோஃப்ட் பங்குகளை அண்மையில் விற்றிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் அவரது பஙகுகளின் எண்ணிக்கை 330,141,164 பங்குகளாக குறைந்து விட்டது.

ஆனால், மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் 333,252,990 பங்குகளை வைத்திருப்பதன் மூலம் மைக்ரோசோஃப்ட்நிறுவனத்தின் அதிகப் பெரும்பான்மை பங்குதாரராக தற்போது திகழ்கின்றார்.

ஸ்டீவ் பால்மர் மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் 2ஆவது தலைமை செயல் அதிகாரி ஆவார்.

bill-GATESமுதல் தலைமை செயல் அதிகாரியான பில் கேட்ஸ் தனக்குப் பின்னர் ஸ்டீவ்  பால்மரை தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார்.

தற்போது ஓய்வு பெற்று விட்ட ஸ்டீவ் பால்மருக்கு பதிலாக மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான சத்யா நடெல்லா நியமிக்கப்பட்டார்.

சத்யா நடெல்லாவின் சம்பளத்தில் கணிசமான பங்கு மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகளாக அவரது செயல் திறனுக்கு ஏற்ப வழங்கப்படும் என்பதால் இனிவரும் காலங்களில் சத்யா நடெல்லாவும் மைக்ரோசோஃப்ட்  நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரராக உயர்வார் என  எதிர்பார்க்கப்படுகிறது.