Home உலகம் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரிப் வலியுறுத்தல்!

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: நவாஸ் ஷெரிப் வலியுறுத்தல்!

450
0
SHARE
Ad

navasஇஸ்லாமாபாத், மே 7 – மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழல் தொடர்பாக பாகிஸ்தானின் தூதர்கள் பங்கேற்ற மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-
“உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட தெற்கு ஆசியாவின் எதிர்கால எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஆற்றல் வாய்ந்த நாடுகளான இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்படும் கூட்டுறவின் மூலம்தான் பூர்த்தி செய்ய முடியுமே தவிர போர் பதற்றத்தால் அல்ல.”

“முன்னேற்றத்தை நோக்கி நாம் வேகமாக செல்வதால் மட்டுமே நமது ஆற்றலை வெளிப்படுத்த முடியும். காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வு காணவே நாம் விரும்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப், காஷ்மீர் பிரச்சனை என்பது பாகிஸ்தானின் உயிர் நாளம் போன்றது. அதை புறந்தள்ளி விட்டு வேறு எதையும் இந்தியாவுடன் பேச முடியாது என்று சமீபத்தில் பேசியிருந்த நிலையில், நவாஸ்  ஷெரிப்பின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.