Home நாடு மஇகா கட்சி தேர்தல் தொடர்பாக சங்கப் பதிவகம் விசாரணை! மறு தேர்தலுக்கு ஆணை பிறப்பிக்கப்படுமா?

மஇகா கட்சி தேர்தல் தொடர்பாக சங்கப் பதிவகம் விசாரணை! மறு தேர்தலுக்கு ஆணை பிறப்பிக்கப்படுமா?

496
0
SHARE
Ad

MIC-Logo-Sliderகோலாலம்பூர், மே 8 – கடந்தாண்டு நவம்பரில் நடந்து முடிந்த மஇகா கட்சித் தேர்தல்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்தததாக புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் நடத்தி வந்த சங்கப் பதிவிலாகா தற்போது தனது விசாரணைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

மஇகா தேர்தல் குழுவின் பொறுப்பாளர்களான டான்ஸ்ரீ கே.குமரன், வழக்கறிஞர் செல்வா மூக்கையா, டத்தோ எஸ்.எஸ்.ராஜகோபால், டத்தோ வி.ஜெகராஜா மற்றும் வழக்கறிஞர் வீ.சிவபரஞ்சோதி ஆகிய ஐவரிடமும் சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.

நடப்பு மஇகா தேசிய தகவல் பிரிவு தலைவர் எல்.சிவசுப்ரமணியமும் விசாரிக்கப்பட்டவர்களில் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

மஇகா தேசிய உதவித் தலைவருக்கு போட்டியிட்ட டத்தோ ஜஸ்பால் சிங் டத்தோ டி.மோகன், டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆகியோர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து சங்கப் பதிவிலாகா தனது விசாரணையைத் தொடக்கியது.

கடந்த மாதம் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்த சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் அஙகேயும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் குழு பொறுப்பாளர்களில் ஒருவரான டான்ஸ்ரீ குமரனை தொடர்பு கொண்ட போது, சங்கப் பதிவிலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதை அவர் உறுதிபடுத்தினார் என ஸ்டார் ஆங்கில நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தல்களில் டத்தோ சோதிநாதன் முதலாவது நிலை உதவித் தலைவராகவும், இரண்டாவது நிலையில் டத்தோ சரவணனும் மூன்றாவது நிலையில் டத்தோ பாலகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.