பிரதமர் நஜீப் துன் ரசாக்கிடமிருந்து எந்த நேரத்திலும் நியமனக் கடிதம் வழங்கப்படலாம் என்பதால் ரசீப் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று வாராந்திர மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அப்துல் ரசீப் நேற்று மாலையே கோலாலம்பூர் புறப்பட்டு வந்துவிட்டார் என்றும் தற்போது பிரதமர் அலுவலகத்தின் அழைப்புக்காக காத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் திரெங்கானுவில் அம்னோ படுதோல்வியைத் தழுவியதை தொடர்ந்து நடப்பு மந்திரி புசாரான அகமட் சைட் இன்னும் 1 ஆண்டு மட்டுமே மந்திரி புசாரக பதவியில் நீடிப்பேன் என்று கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை பிரதமரிடம் வழங்கியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அந்த ஓராண்டு கால அவகாசம் தற்போது முடிவுக்கு வருவதால் அவர் பதவியை விட்டு விலகிச் செல்ல இருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் திரெங்கானு சட்டமன்றத்தில் 17 இடங்களை தேசிய முன்னணி வென்ற வேளையில் பக்காத்தான் கூட்டணி 15 இடங்களை கைப்பற்றியது. எட்டு நாடாளுமன்ற தொகுதிகளில் நான்கை மட்டுமே திரெங்கானு அம்னோவால் வெல்ல முடிந்தது.