Home நாடு தெலுக் இந்தான் இடைத்தேர்தல்:மே 31இல் வாக்களிப்பு – மே 19இல் வேட்புமனு தாக்கல்

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்:மே 31இல் வாக்களிப்பு – மே 19இல் வேட்புமனு தாக்கல்

521
0
SHARE
Ad
GE-SPR-Ballot-boxபுத்ராஜெயா, மே 8 -தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் மே 31ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
வேட்புமனு  தாக்கல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு, டான்ஸ்ரீ அப்துல் அஸிஸ் செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பை செய்தார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை வெற்றி கொண்ட ஜசெகவின் சியா லியோங் பெங், புற்று நோயினால் மே 1ஆம் தேதி காலமானார்.
அவரின் மறைவைத் தொடர்ந்து தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி காலியாகியிருக்கிறது.
பொதுத்தேர்தலில் சியா 27,399 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வேட்பாளர் மாஹ் சியு கியோங்கையும் (20,086 வாக்குகள்) சுயேச்சை வேட்பாளர் கே.முரளியையும் (279) வீழ்த்தினார்.