லாகாட் டத்து, மே 8 – கடத்திச் செல்லப்பட்ட ஒரு மீன் பண்ணையின் மேலாளரான யங் சை லிம் மீதான தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபா மற்றும் பிலிப்பைன்ஸ் மாநிலங்களுக்கு இடையிலான கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படையினரும் மலேசிய காவல்துறையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த தகவலும் கிடைக்காததை அடுத்து இந்தத் தேடுதல் வேட்டை நிறுத்தி வைகக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட யங் ஜோலோ தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த மீன் பண்ணை நிர்வாகியை பிடித்து வைத்திருக்கும் இராணுவ சீருடை அணிந்த ஐந்து துப்பாக்கிக்காரர்கள் தங்களை பின் தொடர்ந்து வந்த மலேசிய பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர் தென் பிலிப்பைன்சுக்கு தப்பியோடி விட்டதாக நம்பப்படுகிறது.
அந்த ஐந்து ஆடவர்களும் பைபர் (Fibre) கண்ணாடியிலான வெள்ளை நிற இயந்திர படகில் எம்16 சுழல் துப்பாக்கிகளை ஏந்தியவாறு செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில் லாஹாட் டத்து சிலாமிலுள்ள ஒரு மீன் பண்ணையில் நுழைந்ததாகவும் அப்போது அஙகு காவலில் இருந்த பாதுகாவலர் அவர்களை தடுத்தி விசாரித்ததாகவும் நம்பப்படுகிறது.
சுமார் ஒரு மாத காலத்தில்நடந்த இரண்டாவது கடத்தல் சம்பவம் இதுவாகும். அண்மையில் இருவரை ஒரு தங்கும் விடுதியில் இருந்து கடத்திச் சென்று கடத்தல்காரர்கள் பிணைப் பணம் கேட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.