சென்னை, மே 9 – குத்து பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டார் ஆண்ட்ரியா. விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் “பூஜை”. ஹரி இயக்குகிறார்.
கமலின் விஸ்வரூபம் படத்துக்கு பிறகு கதாநாயகி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. ஒன்றிரண்டு படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனால், குத்து பாடலுக்கு நடனம் ஆடியது இல்லை.
முதல்முறையாக பூஜை படத்தில் குத்துபாடலுக்கு நடனம் ஆடுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடலுக்கு ஆட பெரிய நடிகையை பட குழு தேடியது.
படத்தில் இது விஷாலின் முதல் பாடலாக இடம்பெறுகிறது. இதில் ஆடுவதற்கு ஆண்ட்ரியா ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக சென்னையில் மார்க்கெட் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.