Home இந்தியா ஐபிஎல் 7: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி!

ஐபிஎல் 7: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி!

521
0
SHARE
Ad

iplஆமதாபாத், மே 9 – ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதன்மூலம் இத்தொடரில் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஹைதராபாத்.

ஆமதாபாதில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் களமிரங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

ipl7135 ரன்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களும், சாம்சன் 16 ரன்களும் எடுத்தனர்.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் 2 இடங்கள் முன்னேறி 5-ஆம் இடத்தைப் பிடித்தது. அதேசமயம், ராஜஸ்தான் 3-வது இடத்திலேயே தொடர்கிறது.