மே 9 – ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்’ (Beats Electronics) நிறுவனத்தை வாங்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. சிறப்பான தொடக்கமாக இருந்தும், ஆப்பிளின் போட்டி நிறுவனமான பேண்டோரா, ரேடியோ சேவையில் கடும் போட்டி அளித்து வருகின்றது. அதன் போட்டியை சமாளிக்க ஆப்பிள் நிறுவனம், பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்-ஐ வாங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஹெட்போன் தயாரிப்பு மட்டும் அல்லாது இசை ஒலிபரப்பு மற்றும் சேர்ப்பிலும் சிறந்து விளங்குகின்றது.
இதற்கான அதிகாரப்பூர்வமானா அறிவிப்புகள் வெளிவராத நிலையில், ஆப்பிள், பீட்ஸ் நிறுவனத்தை சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொடுத்த வாங்க இருப்பதாக கூறப்படுகின்றது.