Home கலை உலகம் ட்விட்டரில் சேர்ந்த நாளே சாதனை – உலக அளவில் ரஜினிக்கு 6-வது இடம்!

ட்விட்டரில் சேர்ந்த நாளே சாதனை – உலக அளவில் ரஜினிக்கு 6-வது இடம்!

566
0
SHARE
Ad

rajiniiசென்னை, மே 9 – ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ரஜினிகாந்த், சர்வதேச அளவில் 6-வது இடத்தில் உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 5-ஆம் தேதி ட்விட்டரில் கணக்கு துவங்கினார். அவர் கணக்கு துவங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தனர். அவர் ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் 46 ஆயிரம் ஃபாலோயர்களை பெற்றார். இது தான் இந்திய அளவில் ஒருவர் ட்விட்டரில் சேர்ந்த நாளே அதிகம் பெற்ற ஃபாலோயர்களாக இருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது இந்தியாவில் ட்விட்டரில் சேர்ந்த முதல் நாளிலேயே அதிக ஃபாலோயர்களை பெற்ற முதல் நபர் என்ற பெறுமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். உலக அளவில் ட்விட்டரில் சேர்ந்த 24 மணிநேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் ரஜினிகாந்துக்கு 6-வது இடம் தான் கிடைத்துள்ளது.