புதுடெல்லி, மே 9 – பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டு, நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடய லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவக்குமார் சார்பில் வழக்கரிஞர் குலசேகரன் மார்ச் 7-ஆம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் எங்கள் நிறுவனத்த குற்றவாளிகளுக்கு சொந்தமானது என்று தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இணைத்துள்ளனர். சென்ன சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் 1997ல் மனு தாக்கல் செய்தோம்.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்ன சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தோம்.
இந்த மனு மீதான விசாரண முடிந்த இறுதி கட்டத்க்கு வந்துள்ளது. எனவே இம்மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை முக்கிய வழக்கு விசாரணயை நிறுத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதி, இந்த மனுவுக்கும், வழக்குக்கும் தொடர்பில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
எனவே, லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் சொத்து முடக்கம் தொடர்பான பிரதான வழக்கு முடியும்வரை பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கு விசாரணையைத் தாமதம் செய்வதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.