Home வணிகம்/தொழில் நுட்பம் பிஎம்டபிள்யூ தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு: புதிய எம்5 30 ஜாரி கார் அறிமுகம்! 

பிஎம்டபிள்யூ தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு: புதிய எம்5 30 ஜாரி கார் அறிமுகம்! 

486
0
SHARE
Ad

bmw-m5-30-years-model-10-750x500மே 9 – பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் நிறைவுபெறுவதை கொண்டாடும் வகையில் அந்நிறுவனம், எம்5 30 ஜாரி எடிசன் என்ற பெயரில் புதிய ரக கார் ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய எம்5 30 ஜாரி காரில் 600 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும் ட்வின் டர்போ கொண்ட 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும், சுமார் 300 எம்5 30 ஜாரி கார்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எம்5 30 ஜாரி எடிசனில் விற்பனை செய்யப்பட உள்ள 300 கார்களும் சில்வர் மெட்டாலிக் வண்ணம் கொண்டதாக இருக்கும். சாதாரண எம்5 காரை விட இந்த காரின் கம்பீரத்தை கூட்டும் விதத்தில் கவர்ச்சிகரமான வெளி மற்றும் உட்புறத் தோற்றத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த எம்5 30 ஜாரி கார்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் கூறியதாவது:-
“எம்5 30 ஜாரில் 7 ஸ்போக்குகள் கொண்ட 19 இஞ்ச் இரட்டை வண்ணக் கலவை கொண்ட இலகு அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பல்வேறு வசதிகளை தரும் மல்டிஃபங்ஷன் இருக்கைகள் காரின் உட்புறத் தோற்றத்தை கூட்டுகிறது. 16 ஸ்பீக்கர் ஹார்மன்/கார்டன் மியூசிக் சிஸ்டம்ஸ் அல்லது அதற்கு மாற்றாக ஒலூஃப்சென் 1200 வாட் ஆடியோ சிஸ்டத்தை பெற்று கொள்ளலாம்.

இந்த ஸ்பெஷல் எடிசன் பிஎம்டபிள்யூ எம்5 சொகுசு கார் 138,275 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.