ஏப்ரல் 5 – உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது 3 ஆம் தலைமுறை எக்ஸ் 5 ஸ்போர்ஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘Third Generation X5 Sport Activity Vehicle’ என்று அழைக்கப்படும் இந்த வகை கார்கள் X5 xDrive 35i (பெட்ரோல்) மற்றும் 30d (டீசல்) ஆகிய இரு ரகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மலேசிய கிளைத் தலைவர் கெர்ஹார்டு பில்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த புதிய X5 அறிமுகங்களின் மூலம் இந்த வருடத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி இரண்டு மடங்காகப் பெருகும்” என்று தெரிவித்துள்ளார்.
X5 xDrive 35i (பெட்ரோல்) மற்றும் 30d (டீசல்) என்ற இந்த இரண்டு வகை கார்களிலும் ஐடிரைவ் கண்ட்ரோலர் (iDrive controller) மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், தனித்தன்மை வாய்ந்த விளக்குகள் கேபினிலும், மூன்று வண்ணங்களுடன் கூடிய எல்இடி விளக்குகள் காரின் முன் பகுதியிலும் (headlight) இணைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, காரின் செயல்திறன், வசதி, பன்முகத்தன்மை மற்றும் ஆடம்பரத் தோற்றம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.