Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் தயாரான பி.எம். டபிள்யு எக்ஸ்5 அறிமுகம்!

மலேசியாவில் தயாரான பி.எம். டபிள்யு எக்ஸ்5 அறிமுகம்!

600
0
SHARE
Ad

BMWகோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான பி.எம். டபிள்யு  குழுமத்தின் மலேசிய கிளையில் பிரத்தியேகமாக தயாரான பி.எம். டபிள்யு எக்ஸ்5 ப்ரிமியம் எஸ்சிவி (SCV)-கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரான பி.எம். டபிள்யு-ன் எக்ஸ்5 ப்ரிமியம் கார்கள் பற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரி கெர்ஹார்ட் பில்ஸ் கூறுகையில், “பல்வேறு நாட்டில் உள்ள  பி.எம். டபிள்யு கிளைகளில் முதல் முதலாக பி.எம். டபிள்யு எக்ஸ் 5 காரானது மலேசிய கிளையில் தயாரிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும். கிழக்கு ஆசியா அளவில் மலேசிய கிளையில் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது” என்று கூறியுள்ளார்.

BMW-02பி.எம். டபிள்யு-ன் மலேசிய கிளை கூலிமில், கடந்த 2008 முதல் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. பி.எம். டபிள்யு-ன் வெற்றிகரமான கிளைகளில் முன்னணி வகிக்கும் மலேசிய கிளை, இது வரை 8,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

BMW-01சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ள பி.எம். டபிள்யு எக்ஸ்5 ப்ரிமியம் கார்கள் ‘எக்ஸ்5 எக்ஸ்டிரைவ்35ஐ’ (X5xDrive35i) மற்றும் ‘எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி’ (X5 xDrive 30d) ஆகிய இரு வேறு ரகங்களில் வெளிவந்துள்ளது.

இரண்டு ரகங்களில் வெளிவந்துள்ள எக்ஸ்5 ப்ரிமியம் கார்கள் இம்மாத இறுதியில் இருந்து விற்பனைக்கு வருகின்றது.

காப்பீடு இல்லாமல் இரு கார்களும் முறையே 579,800 ரிங்கிட்கள் மற்றும் 539,7800 ரிங்கிட்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.