Home இந்தியா உலகக் கிண்ண 20/20 கிரிக்கெட்: வீராட் கோலி விளாசலில் தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதியாட்டத்தில் இந்தியா!

உலகக் கிண்ண 20/20 கிரிக்கெட்: வீராட் கோலி விளாசலில் தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதியாட்டத்தில் இந்தியா!

539
0
SHARE
Ad

Virat Kohli 440 x 215மிர்புர், ஏப்ரல் 5 – வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 5வது உலகக் கிண்ண 20/20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று, அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்று இந்தியா இறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றது.

#TamilSchoolmychoice

நாளை  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதியாட்டத்தில் இந்தியா இலங்கையுடன் மோதவிருக்கின்றது.

வீராட் கோலி விளாசல்

முதலில் தாங்கள் பந்து அடிப்பதாக முடிவு செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 172 ஓட்டம் எடுத்து, 4 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

அடுத்து பந்து வீசிய இந்தியாவின் சார்பாக வீராட் கோலி அற்புதமாக விளையாடி, இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். சிறந்த ஆட்ட நாயகன் விருதையும் வீராட் கோலி பெற்றார்.

இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுககு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையுடன் நாளை மோதல்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் உலக கிண்ண வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் 2007-ம் ஆண்டு வெற்றியாளரான இந்திய அணி, இலங்கையுடன்மோத இருக்கின்றது.

இந்தியாவில் பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் இவ்வேளையில், தெருக்களில் பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சிகளின் விவாதங்கள் என அனல் பறந்து கொண்டிருக்கும் தருணத்திலும், கிரிக்கெட் மீதான காதலை விட முடியாத இந்திய மக்கள் நேற்று இரவு தொலைக்காட்சிகளோடு ஐக்கியமாகினர்.

நாளை இறுதி ஆட்டம் என்பதால், பொதுத் தேர்தல் பிரச்சாரங்களை சற்றே மறந்து வைத்து விட்டு இந்திய மக்கள் தங்களின் தொலைக்காட்சிகளின் முன் இந்தியாவின் ஆட்டத்தை இரசித்துக் கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.