Home நாடு சர்ச்சைக்குரிய ம.இ.காவின் 17 மில்லியன் எம்.ஐ.இ.டி வசம் உள்ளது – முருகேசன் விளக்கம்

சர்ச்சைக்குரிய ம.இ.காவின் 17 மில்லியன் எம்.ஐ.இ.டி வசம் உள்ளது – முருகேசன் விளக்கம்

555
0
SHARE
Ad

murugesanகோலாலம்பூர், மே 10 – ம.இ.காவின் கணக்கில் இன்னும் வராத 17 மில்லியன் ரிங்கிட் மூன்றாம் தரப்பின் வசம் இருப்பதாக கடந்த சில நாட்களாக தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு மஇகாவின் தேசியப் பொருளாளர் டத்தோ எஸ்.முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

எம்.ஐ.இ.டி. அறவாரியத்திடம் மஇகாவின் சர்ச்சைக்குரிய அந்த 17 மில்லியன் கோடி வெள்ளி உள்ளதாக முருகேசன் கூறியுள்ளார்.

நேற்றைய தமிழ் மலர் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் டத்தோ முருகேசன் “எம்ஐஇடி அறவாரியத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பணமே அந்த1.7 கோடி வெள்ளியாகும். 2011 உட்பட முந்தைய ஆண்டுகளுக்கான கணக்கறிக்கையை தாம் பார்வையிட்டபோது இது தெரிய வந்ததது” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற மஇகா பொதுப் பேரவையின்போது சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையில் இந்தத் தொகைக்கு போதிய விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகாவின் 67ஆவது தேசிய பொதுப் பேரவையின் போது சமர்ப்பிக்கப்பட்ட 2012ஆம் ஆண்டு கணக்கறிக்கையில் மட்டுமே இதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.

இவ்வாண்டு பொதுப் பேரவையின் போது சமர்ப்பிக்கப்படவுள்ள கணக்கறிக்கையில் இந்த 1.7 கோடி வெள்ளிக்கான விளக்கத்தை சேர்த்துக் கொள்ளுமாறு தாம் மஇகா கணக்காய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இத்தொகையை மஇகா சார்பாக எம்ஐஇடி அறவாரியத்தின் கீழ் வைக்கப்பட்டிருப்பதற்கு (In trust) மஇகாவின் மத்திய செயலவையே முடிவு செய்தது என்று அவர் மேலும் விவரித்தார்.
அத்தொகை சம்பந்தப்பட்ட எந்தவொரு அடுத்த கட்ட முடிவையும் மஇகாவின் மத்திய செயலவையே எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் தமது அறிக்கையில் முருகேசன் கூறினார்.