முதல் முறையாக பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், நேற்று பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷெரீப், உள்துறை மந்திரி சத்ரி நிசார் அலி கான், வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் மற்றும் சிறப்பு உதவியாளர் தாரிக் பதேமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, வடக்கு வசிரிஸ்தானில் உள்ள தீவிரவாத சரணாலயங்களை அழிக்கும் யோசனையை பர்ன்ஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருநாட்டு அரசுகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்படவில்லை. இருநாட்டு உறவு மற்றும் வட்டாரப் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.