Home கலை உலகம் பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்!

பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்!

645
0
SHARE
Ad

kajal-agrava-facebookசென்னை, மே 10 – காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது பேஸ்புக் வளைதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சுருதிஹாசனை 62 லட்சம் பேரும், சமந்தாவை 52 லட்சம் பேரும், அனுஷ்காவை 48 லட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்.

காஜல் அகர்வால் 2008–ல் பழனி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படம் ஆந்திராவில் பெறும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா படங்கள் முன்னணி நடிகையாக்கியது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

#TamilSchoolmychoice

இந்தி படமொன்றிலும் தற்போது நடித்து வருகிறார்.காஜல் அகர்வாலுக்கு அடுத்த படியாக சுருதிஹாசனுக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். தெலுங்கு படமொன்றில் கவர்ச்சியாக நடித்த சுருதியின் படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.