Home நாடு திரெங்கானுவில் மறு தேர்தல் நடத்துங்கள் அல்லது பாஸ் கட்சி ஆட்சி அமைக்க வழி விடுங்கள் –...

திரெங்கானுவில் மறு தேர்தல் நடத்துங்கள் அல்லது பாஸ் கட்சி ஆட்சி அமைக்க வழி விடுங்கள் – லிம் கிட் சியாங்

609
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Slider---2ஜார்ஜ்டவுன், மே 13 –  திரெங்கானு மாநில சட்டமன்ற சர்ச்சை குறித்து ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) ஆலோசகர் லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்துள்ளார்.

“திரெங்கானு மாநில அரசாங்கத்தை அமைக்கும் உரிமையை அந்த மாநிலத்தில் உள்ள பாஸ் கட்சியிடம் தேசிய முன்னணி ஒப்படைக்க வேண்டும்” என்று அவர் இன்று கூறினார்.

திரெங்கானு மந்திரி புசாராக திங்கட்கிழமை இரவு பதவியேற்ற செபராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அகமட் ரசிஃப் அப்துல் ரஹ்மான் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மந்திரிபுசார் பதவியை ராஜினாமா செய்த அகமட் சைட்டும், அஜில் சட்டமன்ற உறுப்பினர் கஸாலி தாயிப்பும் திங்கட்கிழமை பின்னிரவு அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை உறுப்பினர்களாக மாறினர்.

இவர்களைத் தொடர்ந்து புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டாவுட்டும் செவ்வாய்க்கிழமை காலை அம்னோவிலிருந்து விலகி சுயேச்சையானார்.

இதனைத்  தொடர்ந்து தேசிய முன்னணி திரெங்கானு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து விலகக்கூடுமென தெரிய வருவதாக லிம் கிட் சியாங் மேலும் தெரிவித்தார்.

32 உறுப்பினர்களைக் கொண்ட திரெங்கானு சட்டமன்றத்தில் தற்போது தேசிய முன்னணி பிரதிநிதிகள் 14 பேர் மட்டுமே உள்ளனர். முன்பு 17 பேர் இருந்தனர்.

மக்கள் கூட்டணி சார்பில் இப்போது 15 பிரதிநிதிகள் உள்ளனர். மக்கள் கூட்டணி தேசிய முன்னணியைவிட ஓர் இடம் கூடுதலாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மூன்று சுயேச்சை உறுப்பினர்கள் யார் பக்கம் சாய்கின்றார்களோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை திரெங்கானுவில் ஏற்பட்டுள்ளது.

இதனால், திரெங்கானு மாநிலத்தின் தலைவிதியை நிர்ணயிக்க அந்த மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலை மீண்டும் நடத்தி புதிய தலைமைத்துவத்தை முடிவு செய்ய மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.