Home நாடு அகமட் சைட் மீண்டும் அம்னோவிற்கு திரும்புவார் – ராசிப் உறுதி

அகமட் சைட் மீண்டும் அம்னோவிற்கு திரும்புவார் – ராசிப் உறுதி

592
0
SHARE
Ad

Razibபுத்ரா ஜெயா, மே 14 – திரெங்கானுவில் அம்னோவில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சை உட்பட 3 அம்னோ தலைவர்களும் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள் என புதிய மந்திரி பெசாரான டத்தோ அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

இன்று மதியம் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ராசிப், “இதுவரையில் அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் பெறவில்லை. அவர்களுக்கு இன்னும் சில நேரங்கள் கொடுப்போம். அவர்கள் நிச்சயம் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள். திரெங்கானுவில் தேசிய முன்னணியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருப்பதாகவும், அகமட் சைட் நிச்சயம் அம்னோவிற்கு திரும்புவார் என்றும் ராசிப் உறுதியளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அகமட் சைட் மீண்டும் அம்னோவிற்கு திரும்பும் பட்சத்தில் மற்ற இரு சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிக்குத் திரும்பி தேசிய முன்னணி, பக்காத்தானுக்கு எதிராக திரெங்கானுவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆட்சியைத் தொடரும் என்றும் கூறப்படுகின்றது.