Home கலை உலகம் அஜீத்,அனுஷ்காவுடன் கைகோர்க்கும் த்ரிஷா!

அஜீத்,அனுஷ்காவுடன் கைகோர்க்கும் த்ரிஷா!

508
0
SHARE
Ad

Trishaசென்னை, மே 14 – அஜீத் அனுஷ்காவுடன் கைகோர்க்கிறார் திரிஷா. அஜீத்துடன் ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அஜீத் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இதேபடத்தில் மற்றொரு கதாநாயகி பாத்திரமும் இருப்பதால் அதில் நடிக்க திரிஷாவிடம் கேட்டிருந்தார் கவுதம். தேதி பிரச்சனை காரணமாக அதுபற்றி உறுதி செய்யாமல் இருந்து வந்தார் த்ரிஷா.

#TamilSchoolmychoice

தற்போது மற்ற படங்களின் கால்ஷீட் தேதியை மாற்றிவிட்டு கவுதம் மேனன் படத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறாராம். இன்னும் ஒரு சில நாட்களில் தனது கால்ஷீட் பற்றி உறுதி செய்வதாக இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார் த்ரிஷா என பட வட்டாரங்கள் தெரிவித்தன.