Home நாடு கார் விபத்தில் அன்வாருக்கு வலது கையில் எலும்பு முறிவு!

கார் விபத்தில் அன்வாருக்கு வலது கையில் எலும்பு முறிவு!

566
0
SHARE
Ad

anwar

கோலாலம்பூர், மே 14 – நேற்றிரவு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அவரது வலது தோள்பட்டை அருகே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அவருடன் பயணம் செய்த அவரது மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்கு லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், டேசா ஸ்ரீ ஹார்டமாஸ் அருகே இரவு 10 மணியளவில் அன்வாரின் கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

“சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நேற்று இரவே வீட்டிற்கு திரும்பிவிட்டனர்” என்று பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் பாஹ்மி பாட்ஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.