Home India Elections 2014 தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி – பாஜகவிற்கு 2 இடங்கள்!

தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி – பாஜகவிற்கு 2 இடங்கள்!

536
0
SHARE
Ad

-jaya-karuna-vijayakanthசென்னை, மே 16 – இந்திய நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மற்றவை, ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயண சாமி வெற்றி பெற்றுள்ளார். திமுக கட்சி முதல் முறையாக இந்திய நாடாளுமன்ற தமிழக தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காமல் வரலாறு காணாத படுதோல்வி அடைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய நாடாளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளில், பாஜக  342 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 57 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.