Home இந்தியா டெல்லியில் மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”!

டெல்லியில் மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”!

1008
0
SHARE
Ad

modiடெல்லி, மே 21 – நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் “தடுமாறி” விழப்போயிருக்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக குழு மற்றும் தேசிய ஜனநாயகக் குழுவின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது நரேந்திர மோடிக்கு பலரும் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்படி விஜயகாந்த்தும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார் மோடி. பின்னர் அவரை தமது அருகே வரவழைத்தார்.

#TamilSchoolmychoice

விஜயகாந்தை மோடி அரவணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். அப்படி மோடி அரவணைத்தபோது விஜயகாந்தின் கால்கள் தடுமாறி அவர் அப்படியே மோடி மீது சாய்ந்து கீழே விழப்போக மோடியும் சுதீஷும் அவரை பிடித்துக் கொண்டனர். இது விஜயகாந்தின் கேப்டன் டிவியில் ஒளிபரப்பானது.

இதனைத் தொடர்ந்து மோடிக்கு பொன்னாடை அணிவித்த விஜயகாந்தை கன்னத்தில் தட்டிக் கொடுத்தும் கிள்ளியும் நெகிழ வைத்தார். பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பேசிய மோடி விஜயகாந்தின் தேர்தல் பிரசாரத்தைப் பாராட்டினார். அதேபோல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் தேர்தல் பிரசாரத்தையும் நரேந்திர மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://youtu.be/vAmjBLoAGiY