Home கலை உலகம் ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெருமை -சந்தானம்

ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெருமை -சந்தானம்

665
0
SHARE
Ad

Santhanam, Rajinikanth at YG Mahendran Drama Festival Stillsசென்னை, மே 21 – ரஜினியுடன் எந்திரன் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். தற்போது லிங்கா படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். இரு வேறு கால கட்டங்களில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக எடுக்கின்றனர்.

இதில் மூத்த ரஜினியுடன் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இளம் ரஜினியுடன் நடிக்க சந்தானத்திடம் பேசி வந்தனர். தற்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை டுவிட்டரில் சந்தானமே வெளிப்படுத்தி உள்ளார்.

ரஜினியுடன் நடிப்பது பெருமையான விஷயம் என்று அவர் கூறியுள்ளார்.
கமலுடன் இதுவரை சந்தானம் நடிக்கவில்லை. இது குறித்து அவர் கூறும் போது, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன்.

#TamilSchoolmychoice

கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் நான் பெரிய அதிர்ஷ்டசாலி என்றார்.லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.