Home இந்தியா ஐபிஎல்7: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல்7: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

612
0
SHARE
Ad

ipll7கொல்கத்தா, மே 21 – நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரெய்னா 52 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன், 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

iplliஇதனை அடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 156 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது.

#TamilSchoolmychoice

கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா 39 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய ஷகிப் அல்ஹசன் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.  இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியளில் 4-வது இடத்தில் உள்ளது.