கோலாலம்பூர், மே 21 – மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால நல்லுறவை கொண்டாடும் விதமாக, சீனாவில் இருந்து பெரிய வகை பாண்டா கரடிகளான பெங் யி (பெண்) மற்றும் பு வா (ஆண்) ஆகிய இரண்டும் மாஸ் கார்கோ விமானம் மூலம் கோலாலம்பூர் செப்பாங் விமான நிலையத்திற்கு இன்று காலை 8 மணியளவில் கொண்டு வரப்பட்டன. இந்த இரண்டு கரடிகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மலேசியாவிலுள்ள விலங்குகள் சரணாலத்தில் வசிக்கும்.
படம்: EPA
Comments