Home இந்தியா 2 நாடாளுமன்ற தொகுதிகள் தோல்வி: தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்: 3 பேர்...

2 நாடாளுமன்ற தொகுதிகள் தோல்வி: தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்: 3 பேர் புதிதாக சேர்ப்பு!

765
0
SHARE
Ad

electionசென்னை, மே 21  – தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே 16 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதிமுக ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகளில் 14-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் சிறப்பாக பணியாற்றாததாலும், கட்சியின் வரம்புக்கு மீறி நடந்து கொண்டதாலும் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அத்தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலரை நீக்கம் செய்துள்ளார் ஜெயலலிதா. பாண்டிச்சேரியிலும் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் தோல்வியினால் அங்குள்ள செயலாளரை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சரவையிலிருந்து ரமணா, பச்சைமால், தாமோதரன் உள்ளிட்ட மூவர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த முனுசாமிக்கு தொழிலாளர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலத்துறையை கவனித்த ஆர்.பி., உதயகுமாருக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறித்துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜூக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.