Home India Elections 2014 மே 21 ஆம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்கிறார்!

மே 21 ஆம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்கிறார்!

514
0
SHARE
Ad

modiபுதுடில்லி, மே 16 – இன்று நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜ கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராத நிலையில், 65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜ ஆட்சியில் அமர்ந்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

பாஜ பிரதமர் வேட்பாளரான மோடியின் அலை இந்தியா முழுவதும் வீசியுள்ளது தேர்தல் முடிவுகளில் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

வரும் மே 21 ஆம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ளது. திமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.