Home India Elections 2014 மன்மோகன் சிங் இந்திய மக்களுக்கு கடைசி உரை!

மன்மோகன் சிங் இந்திய மக்களுக்கு கடைசி உரை!

731
0
SHARE
Ad

manmohan_டெல்லி, மே 17 – தனது வாழ்க்கையும், தாம் பதவி வகித்த காலமும் திறந்த புத்தகமாகவே இருந்தது என்று பிரதமர் பதவியிலிருந்து விலகும் முன் மன்மோகன் சிங் இந்திய நாட்டு மக்களுக்கான தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வலிமைப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகவும் பாடுப்பட்டதாகவும் கூறியுள்ளார். நாட்டுக்கு பெருமை சேர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் மன்மோகன் கூறினார்.

இந்தியாவை வலிமையான நாடாக்க பல வாய்ப்புகள் தமக்கு கிடைத்ததாகவும், கிடைத்த வாய்ப்புகளை செயல்படுத்த தமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உலகப்பொருளாதாரத்தை கடைபிடிக்கும் காலம் வந்துவிட்டதாகவும் மன்மோகன் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா தற்போது வலுவான நாடாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர் வரவிருக்கும் புதிய அரசுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே தாம் பதவி விலக முடிவெடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.