Home இந்தியா பாஜ மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?

பாஜ மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?

561
0
SHARE
Ad

General elections in Varanasiபுதுடெல்லி, மே 18- நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதில் பாஜ-விற்கு தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு 282 இடங்கள் கிடைத்துள்ளதால், மந்திரி சபையில் மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து தலைவர்களை இணைப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் வருகிற 20-ந் தேதி பிரதமராக தேர்ந்து எடுக்கப்படும் நரேந்திர மோடி விரைவில் பதவி ஏற்க இருக்கிறார். ஜோதிடர்களுடன் ஆலோசித்து பதவி ஏற்பு விழா தேதியை முடிவு செய்ய பாரதிய ஜனதா தலைவர்கள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை வாரணாசி சென்ற நரேந்திர மோடி இதுகுறித்து அங்கு ஜோதிடர்களிடம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பதவி ஏற்பு விழாவுக்கு 3 ஆயிரம் பேரை அழைக்க திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அழைப்பாளர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. இவ்வளவு அதிகமான பிரமுகர்கள் கலந்துகொள்வதால் பதவி ஏற்பு விழாவை டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாக கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள பரந்த இடத்தில் வைத்துக்கொள்ள நரேந்திர மோடி விரும்புவதாக தெரிகிறது.

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் போது, அவருடன் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

படம்: EPA