Home உலகம் மன்மோகன் ராஜினாமா குறித்து ஒபாமா வருத்தம்!

மன்மோகன் ராஜினாமா குறித்து ஒபாமா வருத்தம்!

562
0
SHARE
Ad

Obamaவாஷிங்டன், மே 18 – மன்மோகன் சிங் ராஜினாமா செய்தது குறித்து பிரிவு உபச்சார நிமித்தமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்குடன் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போனது குறித்து தொலைபேசியில் அழைத்து ஒபாமா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தாங்கள் இருவருக்கும் இடையேயான கடந்த 10 ஆண்டுகால நட்புறவு குறித்த உணர்வுகளை பகிர்ந்து கொண்ட ஒபாமா, மோடி அரசின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை இருப்பதாக உறுதியும், நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பொது வாழ்க்கையில்  மிக சில தலைவர்களே பலரையும் கவர்ந்து மற்றவர்களால் பாராட்டப்படுவதாகவும் அவர்களில் மன்மோகன் குறிப்பிடத் தகுந்தவர் என ஒபாமா பாராட்டியதற்கு, மன்மோகன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.