பாட்னா, மே 18 – பீகார் லோக்சபா தேர்தலில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி கண்டுள்ளதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கிய அவர், அடுத்த அரசு பதவியேற்க ஏதுவாக, சட்டசபையை கலைக்க வலியுறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் ஓரணியாகவும், பா.ஜ., மற்றும் அதிருப்தி ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மற்றொரு அணியாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.