Home நாடு தெலுக் இந்தானில் தேமு வேட்பாளராக கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ போட்டி

தெலுக் இந்தானில் தேமு வேட்பாளராக கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ போட்டி

654
0
SHARE
Ad

mahsiewkeongதெலுக் இந்தான், மே 18 – தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கெராக்கான் கட்சியின் தேசிய் தலைவர் டத்தோ மா சியூ கியோங் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

இந்த தொகுதியில் இரு முறை வென்று இரு முறை தோல்வியுற்ற மா சியூவ் கியோங் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் நேற்று மாலை 4 மணியளவில் சுமார் 2000 பேரின் முன்னிலையில் இந்த அறிவிப்பைச் செய்தார்.

#TamilSchoolmychoice

நாளை திங்கட்கிழமை மே 19ஆம் தேதி காலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். மே 31 ஆம் தேதி சனிக்கிழமை வாக்களிப்பு நடைபெறும்.

“டத்தோ மா சியூ கியோங் சிறந்த சேவையாளர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால கட்டத்தில் சிறப்பான சேவையை வழங்கி வந்துள்ளார். தன் சொந்தப்பணத்தையும் மக்களுக்கு நிறைய செலவழித்துள்ளார். இவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரின் சேவை தொடர வேண்டும் என்பதால் தேசிய முன்னணி அரசாங்கம் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த தொகுதியில் வெற்றி பெற கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றும் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு கெராக்கான் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சியூ கியோங் கெராக்கான் கட்சியின் மதிப்பையும் கௌரவத்தையும் மீண்டும் நிலை நாட்டுவதற்காக இந்தப் போட்டியில் குதித்துள்ளார் என்பதால் அவர் ஜசெகவுக்கு கடுமையான போட்டியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெலுக் இந்தான் தொகுதியை பூர்வீகமாகக் கொண்டவர், அந்த தொகுதியில் கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சேவையாற்றியவர் போன்ற காரணங்களால், தேசிய முன்னணியின் பலம் பொருந்திய வேட்பாளராக அவர் பார்க்கப்படுகின்றார்.