Home இந்தியா மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

541
0
SHARE
Ad

PTI2_9_2014_000033Bடெல்லி, மே 20 – பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வின் பெரும் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தேன். மோடியை பிரதமர் வேட்பாளராக தொலைநோக்கு பார்வையுடன் அறிவித்தமைக்காக ராஜ்நாத்சிங்கை பாராட்டினேன்.

நான் தோற்றுவிட்டதற்காக ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவி்ததார். தோற்றதற்காக எனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறினார் வைகோ. பின்னர் குஜராத் பவனில் நரேந்திர மோடியையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார் வைகோ.