Home உலகம் பூங்காவுக்குள் நுழைந்து சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா!

பூங்காவுக்குள் நுழைந்து சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா!

534
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 20 – அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் உள்ள ‘ஃபிரண்ட்ஷிப் பார்க்கில்’ ‘பேஸ் பால்’ விளையாட்டு பயிற்சியில் சிறுவர் – சிறுமியர் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அங்கு நுழைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு அணியினரிடமும் சென்று, என்ன செய்கிறீர்கள்? விளையாட்டு பயிற்சி எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா? என்று விசாரித்த அவர், அமைதி நிலையில் ஓரமாக அமர்ந்திருந்த சிறுமியை விசாரித்து, ஆறுதல் கூறினார். அங்குள்ளவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஒபாமா, பந்து எரிவது போல் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.