Home அவசியம் படிக்க வேண்டியவை இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு எடின்பர்க்கின் கௌரவப் பட்டம்!

இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு எடின்பர்க்கின் கௌரவப் பட்டம்!

562
0
SHARE
Ad

apj-abdul-kalamலண்டன், மே 20 – இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவப் பட்டம் வழங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கடந்த 15-ம் தேதி இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை, 2020-ல் வல்லரசாக மாற்றுவதற்கு உதவி செய்து வருவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதையும் அங்கீகரித்து பல்கலைக் கழகத்தின் முதல்வரும் துணைவேந்தருமான திமோதி ஓஷியா இந்த பட்டத்தை இந்தியாவின் அப்துல் கலாமுக்கு வழங்கினார்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த அப்துல் கலாம், இந்தியாவின் கிராமப்புற ஏழ்மை நிலை, நதிகள் இணைப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூகப் பொறுப்புணர்வு உள்ள பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார். மேலும், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை போக்க தொழில்நுட்பத்தை கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்து வருகிறார்.