Home கலை உலகம் மோடியை பாராட்டி “மீண்டும் ஒரு சுதந்திரம்” எனும் வீடியோ ஆல்பம் தயாரிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

மோடியை பாராட்டி “மீண்டும் ஒரு சுதந்திரம்” எனும் வீடியோ ஆல்பம் தயாரிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

1198
0
SHARE
Ad

lawrenceசென்னை, மே 20 – சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமரான நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி“மீண்டும் ஒரு சுதந்திரம்” என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

ரஜினியின் ரசிகராகவும், நடன இயக்குனராகவும் தமிழகத்தில் மட்டும் இல்லாது ஆந்திராவிலும் அனைவருக்கும் அறியப்பட்டவர் ராகவா லாரன்ஸ். சென்ற ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்கு ஒரு வீடியோ ஆல்பத்தைத் தாயாரித்து வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.

#TamilSchoolmychoice

மாற்றுத்திரனாளிகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஒரு மையம் நடத்திவரும் ராகவா லாரன்ஸ் பலருக்கும் உதவிகள் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடன இயக்குனர் என்பதையும் தாண்டி இயக்குனராகவும் வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இவர் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அரசியல் தலைவரான மோடியை பாராட்டி ராகவா லாரன்ஸ் ஆல்பம் தயாரிப்பது திரையுலகில் பலருக்கும்  ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

தான் எதை செய்தாலும் அதை தன் குருநாதர் இயக்குனர் கே.பாலச்சந்தரின் ஆசியோடு தான் செய்வேன். இந்த ஆல்பமும் அவரின் ஆசியோடு தான் செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.