Home இந்தியா இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் மோடி!

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் மோடி!

474
0
SHARE
Ad

pranabடெல்லி, மே 20 – பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவராக (பிரதமராக) இன்று நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படுகிறார்.

பின்னர் நரேந்திரமோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு இன்று மதியம் (2.45 மணிக்கு) மலேசிய நேரப்படி 5.15 மணிக்கு நடைபெறுகிறது.

அப்போது மத்தியில் ஆட்சி அமைக்க முறைப்படி மோடி உரிமை கோருகிறார். ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததும் பதவி ஏற்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். பதவி ஏற்பு விழா வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதியை சந்திக்க செல்லும் முன்பு தேதி உறுதி செய்யப்படும் என்று பா.ஜனதா கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.